10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அபார் அடையாள அட்டை (APAAR ID) கட்டாயம் என மத்திய இடைநிலை வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. 2026 கல்வியாண்டு வாரியத் தேர்வுக்கான மாணவர் பட்டியலில், பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகிய விவரங்களுடன் அபார் அட்டையும் சேர்க்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.