ஒகேனக்கல்லில் காவேரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. தற்போது 24 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் வரத்து பதிவாகியுள்ளது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.